சட்டவிரோதமாக குடியேறியவர்களை அறிய நியூயார்க், நியூ ஜெர்சி குருத்வாராக்களில் சோதனை: சீக்கியர்கள் கண்டனம்

அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி நகரங்களில் உள்ள குருத்வாராக்களில் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Jan 28, 2025 - 07:30
 0  3
சட்டவிரோதமாக குடியேறியவர்களை அறிய நியூயார்க், நியூ ஜெர்சி குருத்வாராக்களில் சோதனை: சீக்கியர்கள் கண்டனம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி நகரங்களில் உள்ள குருத்வாராக்களில் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம் தேதி பதவி யேற்றார். அதன்பின், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பவர்கள், விசா முடிந்தும் தங்கியிருப்பவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ட்ரம்ப் தொடங்கி உள்ளார். அதன்படி, கடந்த சில நாட்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்களில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow