கோடம்பாக்கம் ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் பங்கேற்பு
சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

சென்னை: சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள், அக். 28-ம் தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் (உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகே) உள்ள சுதர்மா இல்லத்தை வந்தடைந்தார். நவ.13-ம் தேதி (நேற்று) வரை சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்ட சுவாமிகள், தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
What's Your Reaction?