கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கோலாகலம்: மிளகாய் சாந்து கரைசலில் குளித்து பக்தர்கள் நேர்த்தி கடன்
கொரட்டூர் ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி, பால் குடம் எடுத்து, மிளகாய் தூள் சாந்து கரைசலில் குளித்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

சென்னை: கொரட்டூர் ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி, பால் குடம் எடுத்து, மிளகாய் தூள் சாந்து கரைசலில் குளித்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். கொரட்டூர் டிஎன்எச்பி குடியிருப்பு 47-வது தெருவில் ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் புற்றும், வேப்பமரமும் மட்டும் அமைந்திருக்க, நாகவல்லியை இங்கு பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களின் வேண்டுதல்கள் கைகூட, பின்னர் கோயிலாக உருபெற்று, ஓம்சக்தி நாகவல்லி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
What's Your Reaction?