குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷா சூரசம்ஹாரம் - ‘ஓம் காளி, ஜெய்காளி’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் நடைபெற்றது. விரதம் கடை பிடித்து வேடம் அணிந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்

Oct 2, 2025 - 22:05
 0  3
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷா சூரசம்ஹாரம் - ‘ஓம் காளி, ஜெய்காளி’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் நடைபெற்றது. விரதம் கடை பிடித்து வேடம் அணிந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

தசரா திருவிழா: இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா மிகவும் விமரிசியைாக நடைபெறும். இக்கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து கடந்த 10 நாட்களாக வீதி தோறும் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow