குருவாயூர் கோயிலில் நடைபெற்ற காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம்!

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை கேரளாவின் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Dec 8, 2024 - 12:40
 0  3
குருவாயூர் கோயிலில் நடைபெற்ற காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம்!

கேரளா: நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை கேரளாவின் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர். பின்னர் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’, கமலின் ‘விக்ரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர் பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் என்பவரை காதலித்து வந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow