குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. 

Feb 9, 2025 - 17:35
 0  3
குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

குன்னூர்: குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் வி.பி. தெரு பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவசுப்பிரமணியர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்து அறநிலையத்துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டு காலமாக சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் சேவா சங்கத்தினர் திருப்பணிகளை மேற்கொண்டனர். பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow