குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன: ஓர் இடத்துக்கு மல்லுக்கட்டும் 3 அணிகள்

ஐபிஎல் டி 20 தொடரில் குஜ​ராத் அணி​யின் அபார வெற்​றி​யால் அந்த அணி​யுடன் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி), பஞ்​சாப் அணி​களும் பிளே ஆஃப் சுற்​றில் கால்​ப​தித்​துள்​ளன. மீதம் உள்ள ஓர் இடத்​துக்கு மும்​பை, லக்​னோ, டெல்லி அணி​கள் மல்​லுக்​கட்ட உள்​ளன.

May 20, 2025 - 08:20
 0  4
குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன: ஓர் இடத்துக்கு மல்லுக்கட்டும் 3 அணிகள்

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 தொடரில் குஜ​ராத் அணி​யின் அபார வெற்​றி​யால் அந்த அணி​யுடன் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி), பஞ்​சாப் அணி​களும் பிளே ஆஃப் சுற்​றில் கால்​ப​தித்​துள்​ளன. மீதம் உள்ள ஓர் இடத்​துக்கு மும்​பை, லக்​னோ, டெல்லி அணி​கள் மல்​லுக்​கட்ட உள்​ளன.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 10 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. 200 ரன்​கள் இலக்கை துரத்​திய குஜ​ராத் அணி சாய் சுதர்​சன் 61 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் விளாசிய 108 ரன்​கள் மற்​றும் கேப்​டன் ஷுப்​மன் கில் 53 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் விளாசிய 93 ரன்​கள் உதவி​யுடன் 6 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி பெற்​றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow