சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 3-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி: உலக தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார்
இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னைகோட்டூர்புரத்தில் உள்ள அண்ணாநூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது

சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 3-வது நாளான நேற்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.
மாஸ்டர்ஸ் பிரிவில் ஈரானின் அமீன் தபதாபேயி, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய அமீன்தபதாபேயி 38-வது நகர்த்தலின்போது வெற்றியை வசப்படுத்தினார். 2-வது போர்டில் இந்தியாவின் விதித் குஜராத்தி சகநாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரத்தை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 48-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
What's Your Reaction?