‘கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள்’ - ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் வைத்த ‘செக்’... அடுத்தது என்ன?

ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெவித்துள்ளார்.

Aug 18, 2025 - 14:45
 0  4
‘கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள்’ - ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் வைத்த ‘செக்’... அடுத்தது என்ன?

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் சமீபத்தில் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா - உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. தொடர்ந்து, டொனால்டு ட்ரம்​ப்பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக கிரிமியா, நேட்டோ மறந்துவிட்டால் போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியம் என்று ஜெலன்ஸ்கிக்கு ‘செக்’ வைத்துள்ளார் ட்ரம்ப்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow