காசாவில் உடனடி, நிரந்தர போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தது அமெரிக்கா

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

Jun 6, 2025 - 06:50
 0  3
காசாவில் உடனடி, நிரந்தர போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தது அமெரிக்கா

நியூயார்க்: காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இஸ்ரேல் - காசா இடையே சில மாதங்களுக்கு முன் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வந்தனர். எஞ்சியுள்ள 58 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியது. நிவாரண பொருட்கள் காசாவுக்குள் நுழைவதையும் தடுத்தது. இதனால் காசாவில் உள்ள மக்கள் உணவுக்கு போராடும் நிலை ஏற்பட்டது. உணவு விநியோகிக்கும் இடத்தில் ஏற்பட்ட மோதல் காரணாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதிலும் பலர் இறந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow