கலாமின் கடைசித் தருணமும் நினைவகமும்!
இந்தியக் குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை பதவி வகித்த அப்துல் கலாம், பதவி ஓய்வுக்குப் பிறகு ஆசிரியர் பணிக்குத் திரும்பினார். இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு வருகைப் பேராசிரியராகச் சென்று மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்தார்.

இந்தியக் குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை பதவி வகித்த அப்துல் கலாம், பதவி ஓய்வுக்குப் பிறகு ஆசிரியர் பணிக்குத் திரும்பினார். இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு வருகைப் பேராசிரியராகச் சென்று மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்தார். மாணவர்களைச் சந்தித்தபோதெல்லாம் கனவு, லட்சியத்தை வென்றெடுப்பது பற்றியும் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் பேசினார். எப்போதும் மாணவர்களுடன் உரையாடுவதை ஒரு வழக்கமாகவே அப்துல் கலாம் மாற்றிக் கொண்டிருந்தார்.
அதனால்தானோ என்னவோ, நூற்றுக் கணக்கான மாணவர்கள் முன்பு உரை யாற்றிக் கொண்டிருந்தபோதுதான் அவரை மரணம் தழுவியது. 2015 ஜூலை 27 அன்று வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாத் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐஎம்எம்) ‘வாழக்கூடிய புவியை உருவாக்குதல்' என்கிற தலைப்பில் உரை நிகழ்த்த கலாம் சென்றிருந்தார்.
What's Your Reaction?