கற்பிதங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் மெட்ரோ பெண்கள் | பெண் திரை

ஏன் இந்த வாழ்க்கையில் காதல் என்பது எப்போதும் நிச்சயமற்றதாக இருக்கிறது? ஏன் திருமண வாழ்க்கையில் தொடர்ச்சியாக இணையரைக் காதலிக்க முடிவதில்லை?

Sep 29, 2025 - 21:15
 0  3
கற்பிதங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் மெட்ரோ பெண்கள் | பெண் திரை

ஏன் இந்த வாழ்க்கையில் காதல் என்பது எப்போதும் நிச்சயமற்றதாக இருக்கிறது? ஏன் திருமண வாழ்க்கையில் தொடர்ச்சியாக இணையரைக் காதலிக்க முடிவதில்லை? காதல் வேறு, திருமணம் வேறா? இத்தனை கேள்விகளையும் பெண்ணியப் பார்வையில் முன்வைக்கிறது ‘நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மெட்ரோ இன் தினோ’ என்கிற இந்திப் படம்.

ஒரு நீடித்த திருமணத்துக்குத் தூணாக இருந்த பெண்களின் தியாகங்களையும் அவர்கள் மேல் சுமத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும் இந்த நவீன மெட்ரோ வாழ்க்கையில் பெண்கள் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை மிக நுட்பமாக அலசுகிறது இந்தத் திரைப்படம் “எனக்குத் தெரியாது என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். இறுக்கிப் பிடிக்கிற அவரின் டி ஷர்ட்டுகளும் விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களும் மணிக்கணக்கில் குளியலறையில் கைபேசியுடன் தாழிட்டுக்கொள்வதெல்லாம் எனக்குப் புரியாதா?” என்கிறாள் ஒரு மனைவி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow