கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை
கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. உடனடியாக சீனாவுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் வலியுறுத்தி உள்ளார்.

வாஷிங்டன்: கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. உடனடியாக சீனாவுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கிங் ஜியான் (33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் ஜுன்யாங் லியூவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
What's Your Reaction?