கம்பீர், அகார்கரின் தனிப்பட்ட எண்ணங்களா அணித் தேர்வை தீர்மானிப்பது? - மஞ்சுரேக்கர் சாட்டையடி!

ஜூன் 20ம் தேதி தொடங்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணித்தேர்வு குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

May 29, 2025 - 16:55
 0  4
கம்பீர், அகார்கரின் தனிப்பட்ட எண்ணங்களா அணித் தேர்வை தீர்மானிப்பது? - மஞ்சுரேக்கர் சாட்டையடி!

ஜூன் 20ம் தேதி தொடங்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணித் தேர்வு குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்த அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் பெர்பாமன்ஸ் வைத்து டெஸ்ட் அணி தேர்வு நடைபெறாது என்று கூறிக்கொண்டே சாய் சுதர்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்பு ஹர்ஷித் ராணா தேவைப்பட்டார் திடீரென அவரை உட்கார வைத்து அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவில் ஆகாஷ் தீப் வேண்டாதவராகி விட்டார், ராணா தேவைப்பட்டார். இப்படிப்பட்ட அணித்தேர்வெல்லாம் அவரவர் ஆட்டத்திறன், சமீபத்திய ஃபார்ம் அடிப்படையில் நிகழ்த்தப்படாமல் அகார்கர், கம்பீர் ஆகியோரின் சொந்த உள்ளுணர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow