“கமல்ஹாசனை இயக்க ஆசை...” - ‘தக் லைஃப்’ பார்த்த இயக்குநர் அமீர் விருப்பம்
மதுரையில் ‘தக் லைஃப்’ படம் பார்த்த இயக்குநர் அமீர், “கமல்ஹாசனை இயக்க வேண்டும் என ஆசை உள்ளது” என்று விருப்பம் தெரிவித்தார்.

மதுரை: மதுரையில் ‘தக் லைஃப்’ படம் பார்த்த இயக்குநர் அமீர், “கமல்ஹாசனை இயக்க வேண்டும் என ஆசை உள்ளது” என்று விருப்பம் தெரிவித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிலம்பரசன் ஆகியோர் நடித்த திபை்படம் ‘தக்லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குளில் இப்படம் வெளியானது.
What's Your Reaction?