‘கமல் 237’ அப்டேட்: இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம்

கமலின் ‘237’ படம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர்.

Nov 8, 2025 - 00:15
 0  3
‘கமல் 237’ அப்டேட்: இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம்

கமலின் ‘237’ படம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின்‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர்.

நீண்டநாட்களாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகம் இருந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து கமலின் சமூக வலைதள பக்கத்தில் இப்படத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் கமலின் பிறந்தநாளான இன்று (நவ.07) ‘கமல் 237’ குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய தகவல்களை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow