சிவாஜி வில்லனாக நடித்த ‘பெண்ணின் பெருமை’ | அரி(றி)ய சினிமா

நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஹீரோவாக பெரும்பாலான படங்களில் நடித்திருந்தாலும், திரும்பிப்பார், துளி விஷம், ரங்கோன் ராதா, அந்த நாள், உத்தம புத்திரன் என சில படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார்.

Feb 17, 2025 - 10:30
 0  5
சிவாஜி வில்லனாக நடித்த ‘பெண்ணின் பெருமை’ | அரி(றி)ய சினிமா

நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஹீரோவாக பெரும்பாலான படங்களில் நடித்திருந்தாலும், திரும்பிப்பார், துளி விஷம், ரங்கோன் ராதா, அந்த நாள், உத்தம புத்திரன் என சில படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். அந்த படங்களிலும் அவர் நடிப்பு பேசப்பட்டிருக்கிறது. அவர் வில்லத்தனமான கேரக்டர்களில் நடித்த படங்களின் லிஸ்டில் ‘பெண்ணின் பெருமை’யும் பெருமையாக இருக்கிறது.

மணிலால் பானர்ஜி எழுதிய பெங்காலி நாவலான ‘ஸ்வயம்சித்தா’வை ‘அர்தங்கி’ என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாக்கினார், இயக்குநர் பி.புல்லையா . நாகேஸ்வராவ், சாவித்ரி, சாந்தகுமாரி, ஜக்கையா நடித்த இந்தப் படம் தெலுங்கில் வெற்றிப் பெற்றதை அடுத்து தமிழிலும் இயக்க முடிவு செய்தார், புல்லையா.

இதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, நாகையா, எம்.என்.ராஜம், பிரண்ட் ராமசாமி, டி.என்.சிவதாணு என பலர் நடித்தனர். ஜெமினியும் சிவாஜியும் முதன் முறையாக இணைந்து நடித்த படம் இது. தனது ராகினி பிக்சர்ஸ் சார்பில் புல்லையாவே தயாரித்தார். படத்தின் வசனம் மற்றும் பாடல்களை தஞ்சை ராமையா தாஸ் எழுதினார். பி.என்.ராவ், ஏ.ராமராவ் இசை அமைக்க, பின்னணி இசையை மாஸ்டர் வேணு அமைத்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow