கனடாவில் வாழும் சீக்கியர்கள் அனைவருமே காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்ல: ட்ரூடோ விளக்கம்
கனடாவில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்ல என்றும், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஒட்டவா: கனடாவில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்ல என்றும், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, "கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதேபோல், கனடாவில் பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் கனடாவில் உள்ள அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?