‘கனடா அமெரிக்காவுடன் இணையலாம்’ - ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் ட்ரம்ப் கருத்து
கனடா அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணையலாம் என இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

நியூயார்க்: கனடா அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணையலாம் என இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சொந்த கட்சியினரின் ஆதரவு, கூட்டணி கட்சியின் ஆதரவு உள்ளிட்டவற்றை இழந்த காரணத்தால் தனது பதவியை 53 வயதான பிரதமர் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது.
What's Your Reaction?