கடகம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

கடக ராசி அன்பர்களே, 2025-ம் ஆண்டு செல்வச் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தரும். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகள் ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும்.

Dec 17, 2024 - 18:25
 0  14
கடகம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு செல்வச் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தரும். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகள் ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம்: உங்கள் பேச்சில் வசீகரமும் இனிமையும் வேதாந்த ரகசியங்களும் கலந்து இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். தாயின் உடல் நலத்தில் சிறுசிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். பூர்வ புண்ணிய சொத்துக்கள் உங்களை வந்து சேரும். வெகுகாலம் தீராத பிரச்சினைகள் தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். உறவினர்கள் உங்களிடம் உதவிகளைப் பெற வருவார்கள். நடைமுறை செயல்பாடுகளை அறிந்து அதற்கேற்ப உதவலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow