கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 12 - 18
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 12 - 18

கடகம்: (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: ஆனி 01 (15.06.2025) அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சூரியன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம், சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும்.
What's Your Reaction?