‘கங்குவா’ படத்தை வெளியிட நிபந்தனையுடன் ஐகோர்ட் அனுமதி

இரு வழக்குகளில் ரூ.8 கோடியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியதால் நிபந்தனையுடன்  ‘கங்குவா’ படத்தை திட்டமிட்டபடி வெளியிட அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nov 13, 2024 - 22:55
 0  4
‘கங்குவா’ படத்தை வெளியிட நிபந்தனையுடன் ஐகோர்ட் அனுமதி

சென்னை: இரு வழக்குகளில் ரூ.8 கோடியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியதால் நிபந்தனையுடன் ‘கங்குவா’ படத்தை திட்டமிட்டபடி வெளியிட அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திவாலானவர் என அறிவிக்கப்பட்டு இறந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கடனாக பெற்ற அசல் தொகையான ரூ.10.35 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.36 கோடியாக செலுத்தாமல் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என தடை கோரி உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரூ.20 கோடியை நவ.13-ம் தேதிக்குள் டிபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என தடை விதித்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow