‘கங்குவா’ அருமையான திரைப்படம்: நடிகர் சூரி கருத்து

“நடிகர் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் அருமையாக உள்ளது. நன்றாக இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான படமாகத்தான் நான் இதை பார்க்கிறேன்” என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Nov 18, 2024 - 20:45
 0  4
‘கங்குவா’ அருமையான திரைப்படம்: நடிகர் சூரி கருத்து

தூத்துக்குடி: “நடிகர் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் அருமையாக உள்ளது. நன்றாக இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான படமாகத்தான் நான் இதை பார்க்கிறேன்” என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார். கோயிலில் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதிகளில் வழிபட்டார். வெளியே வந்த நடிகர் சூரி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “டிசம்பர் 20-ம் தேதி நான் நடித்த ‘விடுதலை’ படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளது. அப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow