ஒழுங்குமுறை அனுமதியை தாமதிப்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும்: நிர்மலா சீதாராமன்

ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் செயல்முறைகளில் குறைவான வெளிப்படைத்தன்மை ஆகியவை நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) சரியான நேரத்தில் முடிவடைவதை பாதிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். 

May 20, 2025 - 17:40
 0  3
ஒழுங்குமுறை அனுமதியை தாமதிப்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும்: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் செயல்முறைகளில் குறைவான வெளிப்படைத்தன்மை ஆகியவை நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கி, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) சரியான நேரத்தில் முடிவடைவதை பாதிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தற்போது அமெரிக்காவில் அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும்வேளையில் நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India) 16-வது ஆண்டு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர், இந்தியாவின் சுதந்திரமான மற்றும் நியாயமான சந்தையின் முக்கியத்துவத்தையும், அது எவ்வாறு முழுமையான பொருளாதாரத்துக்கு உதவும் என்பதையும் எடுத்துரைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow