ஒரு பவுன் ரூ.82,000-ஐ நெருங்கியது - நகை வியாபாரிகள் சொல்வது என்ன?
சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு பவுன் தங்கம் நேற்று ரூ.81,920-க்கு விற்பனையானது.

சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு பவுன் தங்கம் நேற்று ரூ.81,920-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தும், அவ்வப்போது சற்று குறைந்தும் வருகிறது. கடந்த ஜூலை மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 6-ம் தேதி ஒருகிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்தது. 7-ம் தேதியும் ரூ.10,005 என்ற விலையே நீடித்தது. 8-ம் தேதி ரூ.10,060 ஆகவும், 9, 10, 11-ம் தேதிகளில் ரூ.10,150 ஆகவும் உயர்ந்தது. ஒரு பவுன் விலை ரூ.81,200 ஆக இருந்தது.
What's Your Reaction?