ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

நவிமும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
இந்திய அணி அரை இறுதிக்கு போராடியே தகுதி பெற்றிருந்தது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக தொடங்கிய இந்திய அணி அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வி அடைந்து பின்னடைவை சந்தித்தது. இதன் பின்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஆகியோர் விளாசிய சதம் மற்றும் பந்துவீச்சில் காட்டிய கட்டுக்கோப்பான திறனால் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தி அரை இறுதியில் கடைசி அணியாக நுழைந்தது.
What's Your Reaction?