“ஏஐ வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது!” - பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கைப் பேச்சு
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என்று பிரான்ஸில் நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பாரிஸ்: செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என்று பிரான்ஸில் நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் 2-வது நாளான இன்று பங்கேற்று உரையாற்றினார். இந்த மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் டிங் சூயெக்ஸியாங் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், மைக்ரோசாப்ட், கூகுள், ஓபன் ஏஐ உட்பட பல்வேறு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் மனிதர்கள் நலனுக்காகப் பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடைபெறுகிறது.
What's Your Reaction?