எறும்புகள் எப்படித் தகவல் தொடர்பு கொள்கின்றன? | உயிரினங்களின் மொழி - 8
எறும்புகள் ஆபத்தை உணரும்போது, அவற்றின் மேல் தாடைக்கு அடியில் உள்ள சிறப்புச் சுரப்பிகளிலிருந்து 'எச்சரிக்கை பெரோமோன்களை' வெளியிடுகின்றன. இந்த பெரோமோன்கள் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் புற்று முழுவதும் பரவக்கூடிய திறன்கொண்டவை. இது காற்றில் மிக வேகமாகப் பரவி, மற்ற எறும்புகளை உடனடியாக 'போர் நிலை'க்கு மாற்றுகின்றன. இந்த ரசாயனத்தை முகரும் எறும்புகள் உடனடியாக ஆபத்திலிருந்து வெளியேறுகின்றன. ஒரு சில எறும்புகள் விடும் இந்த எச்சரிக்கை பெரோமோன்கள் ஆயிரக்கணக்கான எறும்புகளை ஒரே நேரத்தில் காப்பாற்றும் திறன் கொண்டவை.

எறும்புகள் என்றாலே சுறுசுறுப்பான உயிரினம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆர்க்டிக், அண்டார்டிக்கா தவிர, பூமியின் அனைத்துக் கண்டங்களிலும் வாழும் சிறிய உயிரினம் எறும்பு.
எறும்புகள் கூட்டம் கூட்டமாக ஒரு புற்றில் வாழ்கின்றன. அதில் ஒவ்வோர் எறும்புக்கும் ஒவ்வொரு வேலை என்கிற வகைப்பாடு இருக்கும். சில எறும்புகள் உணவு தேடுகின்றன. சில எறும்புகள் புற்றைப் பாதுகாக்கின்றன. மேலும் சில எறும்புகள் பராமரிப்பாளர்களாக இருக்கின்றன. ராணி எறும்பு முட்டைகள் இடுவதில் மட்டுமே கவனம் செலுத்தும். அனைத்துப் பணிகளும் சரிவர நடைபெற அவற்றுக்குள் உள்ள தகவல்தொடர்பு முறை உதவுகிறது.
What's Your Reaction?