உலகில் அதிவேகமாக வளர்கிறது இந்தியா: பொருளாதாரம் குறித்த சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்
உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என்று மார்கன் ஸ்டான்லியின் சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி: உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என்று மார்கன் ஸ்டான்லியின் சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்டவை தங்களின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அதிக தொகையை செலவிட்டு வருகின்றன. ஆனால் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு சர்வதேச பொருளாதாரம் முழுமையாக மீட்சி அடையவில்லை.
What's Your Reaction?