உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்தது விமான போக்குவரத்து துறை
உலக அளவில் அதிக அளவிலான பயணிகளை கையாளும் விமானப் போக்குவரத்து சந்தைகளில் இந்தியா 3-ம் இடம் பிடித்துள்ளது. விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம்.

புதுடெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறை உலக அளவில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) இயக்குநர் (இந்தியா, நேபாளம், பூடான்) அமிதாப் கோஸ்லா கூறியதாவது:
உலக அளவில் அதிக அளவிலான பயணிகளை கையாளும் விமானப் போக்குவரத்து சந்தைகளில் இந்தியா 3-ம் இடம் பிடித்துள்ளது. விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். இந்தியாவில் வேலைவாய்ப்பு, பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் விமான போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
What's Your Reaction?