ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு

சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் ஈரான் மீதான அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டது.

Sep 3, 2025 - 09:20
 0  3
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு

புதுடெல்லி: சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் ஈரான் மீதான அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக எஸ்​சிஓ கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

இப்​போதைய சூழலுக்கு ஏற்ப ஐ.நா. சபை​யில் சீர்​திருத்​தங்​கள் செய்​யப்பட வேண்​டும். குறிப்​பாக ஐ.நா.​வின் ஆட்சி மன்ற அமைப்​பு​களில் வளரும் நாடு​களுக்கு போதிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கப்பட வேண்​டும். ஒரே பூமி, ஒரே குடும்​பம், ஒரே எதிர்​காலம் என்ற கொள்​கையை எஸ்​சிஓ அமைப்பு பின்​பற்​றுகிறது. உலகத்​தின் நன்​மைக்​காக எஸ்​சிஓ பாடு​படும். தீவிர​வாதம், பிரி​வினை​வாதம், போதைப் பொருள் கடத்​தல், ஆயுத கடத்​தல் உள்​ளிட்ட குற்​றங்​களுக்கு எதி​ராக உறுப்பு நாடு​கள் ஒன்​றிணைந்து செயல்​படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow