ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிப்பு: சரமாரியாக தாக்கிய இஸ்ரேல் விமான படை - முழு விவரம்

ஸ்​ரேல் விமானப்​படை நேற்று சரமாரி​யாக குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தி​ய​தில், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள், 2 ராணுவ முகாம்​கள் அழிக்​கப்​பட்​டன. இந்த​தாக்​குதலில் ஈரானின் 6 அணுசக்தி விஞ்​ஞானிகள், 3 ராணுவ தளப​தி​கள் உயி​ரிழந்​தனர்.

Jun 14, 2025 - 07:55
 0  3
ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிப்பு: சரமாரியாக தாக்கிய இஸ்ரேல் விமான படை - முழு விவரம்

தெஹ்ரான்: இஸ்​ரேல் விமானப்​படை நேற்று சரமாரி​யாக குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தி​ய​தில், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள், 2 ராணுவ முகாம்​கள் அழிக்​கப்​பட்​டன. இந்த​தாக்​குதலில் ஈரானின் 6 அணுசக்தி விஞ்​ஞானிகள், 3 ராணுவ தளப​தி​கள் உயி​ரிழந்​தனர்.

அணுஆ​யுதம் தயாரிக்க பயன்​படும் மூலப்​பொருளான யுரேனி​யம்,ஈரானிடம் சுமார் 275 கிலோ வரை இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. இந்த யுரேனி​யம் தற்​போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. சுமார் 90 சதவீதம் அளவுக்கு இதை செறிவூட்​டி​னால் அணுகுண்​டு​ தயாரிக்க முடி​யும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இதற்​கிடையே, அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்​டங்​கள் தொடர்​பாக அந்த நாட்​டுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இது​வரை 5 கட்ட பேச்​சு​ நடத்தியும், எந்தஉடன்​பாடும் எட்​டப்​பட​வில்​லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow