இஸ்ரேல் தொடர் தாக்குதலால் டெஹ்ரானில் அணுக்கதிர் வீச்சு அபாயம்: ஈரானின் புதிய ராணுவ தளபதி உயிரிழப்பு - நடந்தது என்ன?

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார்.

Jun 18, 2025 - 08:45
 0  5
இஸ்ரேல் தொடர் தாக்குதலால் டெஹ்ரானில் அணுக்கதிர் வீச்சு அபாயம்: ஈரானின் புதிய ராணுவ தளபதி உயிரிழப்பு - நடந்தது என்ன?

டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார்.

அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் ராணுவத் தளபதி முகமது பகேரி, ஐஆர்ஜிசி படை தளபதி உசைன் சலாமி, ஈரான் போர் கட்டளை தலைமையக தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, ஈரானின் புதிய தளபதியாக அலி ஷத்மானி நியமிக்கப்பட்டார். இவர் ஐஆர்ஜிசி படை, போர் கட்டளை தலைமையக தளபதி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் டெஹ்ரானில் உள்ள ரகசிய இடத்தை குறிவைத்து தாக்கின. இதில் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow