இஸ்ரேல் தாக்குதலில் 78 பேர் உயிரிழப்பு; 320 பேர் காயம்: ஈரானுக்கான ஐ.நா தூதர் தகவல்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்தார்.

Jun 14, 2025 - 13:45
 0  5
இஸ்ரேல் தாக்குதலில் 78 பேர் உயிரிழப்பு; 320 பேர் காயம்: ஈரானுக்கான ஐ.நா தூதர் தகவல்

தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ.நா.தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய அமீர் சயீத் இரவானி, “இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு எதிரானவை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இஸ்ரேல் பல ஈரானிய நகரங்களில் உள்ள பல பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து ஆக்கிரமிப்புச் செயல்களை நடத்தி வருகிறது” என்று அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow