இஸ்ரேல் தாக்குதலில் 6 விமான படை தளங்கள் அழிப்பு: ரஷ்யாவிடம் ஆயுத உதவி கேட்கும் ஈரான்

இஸ்ரேல் விமான படை நேற்று நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமான படை தளங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த நாட்டின் 15 போர் விமானங்கள் மற்றும்ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின.

Jun 24, 2025 - 01:50
 0  5
இஸ்ரேல் தாக்குதலில் 6 விமான படை தளங்கள் அழிப்பு: ரஷ்யாவிடம் ஆயுத உதவி கேட்கும் ஈரான்

இஸ்ரேல் விமானப்படை நேற்று நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமானப்படை தளங்கள், ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ரஷ்யாவிடம் ஈரான் ஆயுத உதவி கேட்டுள்ளது.

அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணு சக்தி தளங்கள் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசின. இதில் 3 அணு சக்தி தளங்களும் முழுமையாக தகர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow