இஸ்ரேலை பழிவாங்க ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசியது ஈரான்
இஸ்ரேல் மீது ‘ஃபதா 1’ என்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.

டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ‘ஃபதா 1’ என்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இதில் ஈரானின் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இஸ்ரேலிலும் உயிரிழப்பு எண்ணிக்கு 25-ஐ தாண்டிவிட்டது, 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
What's Your Reaction?