“இஸ்ரேலும் ஈரானும் சிறுபிள்ளைகள் போல நடந்து கொண்டதால்...” - ட்ரம்ப் விளக்கம்

இஸ்ரேலும் ஈரானும் சிறுபிள்ளைகள் போல நடந்துகொண்டதால் வலுவான மொழியைப் பயன்படுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்

Jun 25, 2025 - 19:15
 0  2
“இஸ்ரேலும் ஈரானும் சிறுபிள்ளைகள் போல நடந்து கொண்டதால்...” - ட்ரம்ப் விளக்கம்

தி ஹாக்: இஸ்ரேலும் ஈரானும் சிறுபிள்ளைகள் போல நடந்துகொண்டதால் வலுவான மொழியைப் பயன்படுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்

நெதர்லாந்தின் தி ஹாக்கில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இஸ்ரேலும் ஈரானும் ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு குழந்தைகளைப் போல நடந்துகொண்டார்கள், அவர்களுக்குள் ஒரு பெரிய சண்டை நடந்தது. அவர்கள் நரகத்தைப் போல சண்டையிட்டார்கள். நீங்கள் அவர்களை உடனே தடுக்க முடியாது. அவர்கள் சுமார் இரண்டு, மூன்று நிமிடங்கள் சண்டையிட வைத்து, பின்னர் அவர்களைத் தடுப்பது எளிது" என்று கிண்டலாக பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow