ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Jan 17, 2025 - 22:50
 0  4
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் சுமார் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்தது உறுதியானதை அடுத்து ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நசீர் ஜாவேத் ராணா இந்த தீர்ப்பை வழங்கினார். ஏற்கெனவே, இந்த வழக்கில் மூன்று முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow