இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மூவரை விடுவித்தது ஹமாஸ் - பதிலுக்கு 369 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் மூவரை ஹமாஸ் தீவிரவாத இயக்கம் விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.

Feb 15, 2025 - 19:25
 0  3
இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மூவரை விடுவித்தது ஹமாஸ் - பதிலுக்கு 369 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

டெல் அவிவ்: பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் மூவரை ஹமாஸ் தீவிரவாத இயக்கம் விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.

கடந்த 2023, அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 48,219 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இஸ்ரேல் - ஹாமாஸ்கள் இடையே கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்தத்தின் முக்கிய கொள்கைகளை இஸ்ரேல் மீறிவிட்டதாக குற்றம்சாட்டிய ஹமாஸ், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட இருந்த 3 இஸ்ரேலியக் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow