இயக்குநர் சணல்குமார் சசிதரனுக்கு ஜாமீன்

மலையாள இயக்குநர் சணல்குமார் சசிதரன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர்,  பாலியல் புகார் கூறியிருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சணல் குமார் சசிதரன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

Sep 10, 2025 - 07:35
 0  10
இயக்குநர் சணல்குமார் சசிதரனுக்கு ஜாமீன்

மலையாள இயக்குநர் சணல்குமார் சசிதரன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர், பாலியல் புகார் கூறியிருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சணல் குமார் சசிதரன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த நடிகை, சமூக வலைதளங்களில் தனது பெயருக்குக் களங்கம் விளைக்கும் வகையிலும் மிரட்டும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருவதாகக் கூறி அந்த இயக்குநர் மீது 2024-ம் ஆண்டு மீண்டும் புகார் அளித்தார்.

கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அப்போது இயக்குநர் அமெரிக்காவில் இருந்ததால், அவரைத் தேடப்படும் நபராக அறிவித்து கடந்த ஜனவரியில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து மும்பை விமான நிலையம் வந்த அவர், இரு தினங்களுக்கு முன் அங்கு தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அவர் கொச்சி போலீஸாரிடம் திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் அவரை, கேரளா கொண்டு வந்து விசாரித்தனர். இதற்கிடையே ஜாமீன் கேட்டு ஆலுவா நீதிமன்றத்தில் சணல்குமார் சசிதரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow