‘இன்டர்னல் எக்ஸாம்’ வைத்து 300 பேரை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!
நிறுவனத்தின் பெங்களூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்று, மூன்று முறை முயன்றும் உள்மதிப்பீட்டு தேர்வுகளில் (internal exam) வெற்றி பெறாததால் 300 பேரை இன்போசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

பெங்களுரூ: நிறுவனத்தின் பெங்களூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்று, மூன்று முறை முயன்றும் உள்மதிப்பீட்டு தேர்வுகளில் (internal exam) வெற்றி பெறாததால் 300 பேரை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
இன்ஃபோலிஸ் நிறுவனம் கூறியதை விட பாதிக்கப்பட்ட புதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தை நாட உள்ளதாக தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் கூட்டமைப்பான என்ஐடிஇஎஸ் தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பொங்களுரூ தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.
What's Your Reaction?