இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி

இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

Aug 21, 2025 - 15:40
 0  4
இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி

நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது 25% இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு கலோரிலான மாகாண முன்னாள் ஆளுநரும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பின்னர் போட்டியில் இருந்து விலகியவருமான நிக்கி ஹேலி, இது தொடர்பாக நியூஸ் வீக் இதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow