‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ - பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

பயங்கரவாதப் பிரச்சினையில் உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உதவ வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

Jun 5, 2025 - 13:55
 0  4
‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ - பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

வாஷிங்டன்: பயங்கரவாத பிரச்சினையில் உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவ வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடனான சிக்கல்களை தணிப்பதில் ட்ரம்பின் பங்கைப் பாராட்டினார். மேலும், அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிப்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow