“இந்தியாவுக்கு பயணிக்குமாறு எலான் மஸ்குக்கு அறிவுரை வழங்குவேன்'' - தந்தை எரோல் மஸ்க் பகிர்வு
கொஞ்சம் ஓய்வெடுக்குமாறும், இந்தியாவுக்குச் செல்லுமாறும் எலான் மஸ்க்குக்கு அறிவுரை வழங்குவேன் என்று அவரது தந்தை எரோல் மஸ்க் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: கொஞ்சம் ஓய்வெடுக்குமாறும், இந்தியாவுக்குச் செல்லுமாறும் எலான் மஸ்க்குக்கு அறிவுரை வழங்குவேன் என்று அவரது தந்தை எரோல் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க், மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, சமூக ஊடக தளமான எக்ஸ், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக உள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவுவது, செயற்கைக்கோள் அடிப்படையில் இணைய சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவையை இந்தியாவில் தொடங்குவது தொடர்பாக எலான் மஸ்க் நிறுவனம், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வர எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். எனினும், பின்னர் அந்தப் பயணம் கைவிடப்பட்டது.
What's Your Reaction?