இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 27%-ல் இருந்து 5.3% ஆக குறைந்தது: உலக வங்கி அறிக்கையில் தகவல்
இந்தியாவில் 11 ஆண்டில் பரம ஏழைகள் எண்ணிக்கை 27% - லிருந்து 5.3% ஆக குறைந்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 11 ஆண்டில் பரம ஏழைகள் எண்ணிக்கை 27% - லிருந்து 5.3% ஆக குறைந்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏழ்மை நிலை தொடர்பாக உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-12 நிதியாண்டில் இந்தியாவில் பரம ஏழைகள் எண்ணிக்கை 34.44 கோடியாக இருந்தது. இது 2022-23 நிதியாண்டில் 7.52 கோடியாகக் குறைந்துள்ளது. 11 ஆண்டில் 26.9 கோடி பேர் பரம ஏழைகள் என்ற நிலையில் இருந்து மீண்டுள்ளனர். அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு 27.1 சதவீதமாக இருந்த பரம ஏழைகளின் விகிதம் இப்போது 5.3% ஆக குறைந்துள்ளது.
What's Your Reaction?