இந்தியாவில் ஏஐ மூலம் மாற்றம் கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம்: சுந்தர் பிச்சை தகவல்

அமெரிக்க டெக் நிறுவன சிஇஓ-க்களுடன் பிரதமர் மோடி வட்டமேசை ஆலோசனை மேற்கொண்டார். இதில் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் பங்கேற்றார்.

Nov 11, 2024 - 15:53
 0  5
இந்தியாவில் ஏஐ மூலம் மாற்றம் கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம்: சுந்தர் பிச்சை தகவல்

நியூயார்க்: அமெரிக்க டெக் நிறுவன சிஇஓ-க்களுடன் பிரதமர் மோடி வட்டமேசை ஆலோசனை மேற்கொண்டார். இதில் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் பங்கேற்றார். இதில் பிரதமர் மோடி கூறியது குறித்து அவர் கூறும்போது, “கூகுள் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தயாரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி ஊக்கம் அளித்தார். எங்களது பிக்சல் போன்கள் இந்தியாவில்தான் இப்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது இந்நேரத்தில் எங்களுக்கு பெருமை தருகிறது.

ஏஐ தொழில்நுட்பம் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். ஏஐ மூலம் இந்தியாவில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறார். குறிப்பாக கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். அந்த வகையில் அது சார்ந்த பணிகளை மேற்கொள்ளுமாறு எங்களை கேட்டுக் கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow