இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளி: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Aug 29, 2025 - 13:50
 0  3
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளி: பிரதமர் மோடி

டோக்கியோ: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரை நிகழ்த்தினார். அவரது உரை விவரம் வருமாறு: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் முதல் உற்பத்தி வரை, குறைக்கடத்திகள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை, ஒவ்வொரு துறையிலும் நமது கூட்டாண்மை பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow