இந்தியாவின் தடை காரணமாக பாதிப்பு: பாகிஸ்தானில் சரக்கு கட்டணம் கடும் உயர்வு

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பிறகு பாகிஸ்​தானில் இருந்து வரும் அல்​லது ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்களை இந்​திய துறை​முகங்​கள் வழி​யாக (கப்​பல் மூலம்) நேரடி​யாக​வும் மறை​முக​மாக​வும் கொண்டு செல்ல மத்​திய அரசு தடை விதித்​தது.

Jun 30, 2025 - 08:30
 0  4
இந்தியாவின் தடை காரணமாக பாதிப்பு: பாகிஸ்தானில் சரக்கு கட்டணம் கடும் உயர்வு

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பிறகு பாகிஸ்​தானில் இருந்து வரும் அல்​லது ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்களை இந்​திய துறை​முகங்​கள் வழி​யாக (கப்​பல் மூலம்) நேரடி​யாக​வும் மறை​முக​மாக​வும் கொண்டு செல்ல மத்​திய அரசு தடை விதித்​தது. இதனால் கடல்​சார் தளவாட போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது மட்​டுமல்​லாமல், விதி​மீறல்​களை கண்​டறிவதற்​கான சோதனை​களும் தீவிரப்​படுத்​தப்​பட்​டன.

இந்த நடவடிக்​கை​யின்​படி இது​வரை ரூ.9 கோடி மதிப்​புள்ள 1,100 டன் பொருட்​களை ஏற்​றிச் சென்ற 39 கன்​டெய்​னர்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக மத்​திய நிதி​யமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. பாகிஸ்​தானைச் சேர்ந்த பொருட்​கள் ஐக்​கிய அரபு அமீரக பொருட்​கள் என தவறாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது சோதனை​யில் தெரிய​வந்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow