இந்தியாவின் ஜிடிபி 6.6% ஆக உயரும்: முந்தைய கணிப்பை விட 0.2% உயர்த்தியது ஐஎம்எப்
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6% ஆக உயரும் என ஐஎம்எப் தனது கணிப்பை உயர்த்தி உள்ளது. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6% ஆக உயரும் என ஐஎம்எப் தனது கணிப்பை உயர்த்தி உள்ளது. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு 2025-26 நிதியாண்டில் 6.4% வளரும் என ஜூலை மாதம் வெளியிட்ட உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், முதல் காலாண்டில் நிறுவனங்களின் லாபம் கணிசமாக அதிகரித்திருந்தது. 5 காலாண்டுகளில் இல்லாத வகையில், முதல் காலாண்டு ஜிடிபி 7.8% ஆக இருந்தது. மேலும் உள்நாட்டு தேவை அதிகரிப்பு, அரசின் செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், இந்தியாவின் ஜிடிபி நடப்பு நிதியாண்டில் 6.6% ஆக உயரும்.
What's Your Reaction?