இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Jul 1, 2025 - 15:15
 0  3
இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை

வாஷங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், நேற்று (ஜூன் 30) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அமெரிக்கா எவ்வாறு கருதுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த கரோலின் லீவிட், “ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா மிகவும் முக்கியமான நட்பு நாடாக உள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகச் சிறந்த உறவைக் கொண்டுள்ளார். அதை அவர் தொடர்ந்து வைத்திருப்பார்.” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow